Atheist Alliance International on FaceBook Atheist Alliance International on Twitter Atheist Alliance International on MySpace Atheist Alliance International on YouTube Atheist Alliance International on Google+ Atheist Alliance International on AtheistNexus

சர்வதேச நாத்திகர் கூட்டமைப்பு என்ற இந்த அமைப்பு தனது  உறுப்பினர் அமைப்புகளையும்,தனி மனிதர்களையும், குழுக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு உலக அமைப்பு. இது மதசார்பின்றி வாழ விரும்பும்  மக்களின் வாழ்வில் மதத்தின் ஊடுறுவலை எதிர்த்து போரிடவும்; அரசாங்கத்திலும் மற்றும் சமுதாயத்திலும் பகுத் தறிவு,திறனாய்வு சிந்தனை ,அடிப்படை காரணங்கள் மற்றும் சான்றுகள் அடிப்படையில் உருவான  சிந்தனைகள் போன்றவற்றை  பயன்படுத்த ஊக்குவிக்கிறது .

பல அமைப்புகள் கூட்டு நிபுணத்துவம் பெறுவதற்காகவும், AAIல் இணைந்துள்ள மற்ற குழுக்களின் வளத்தை பகிர்ந்து கொள்வதற்காகவும் சர்வதேச நாத்திகர் கூட்டமைப்பில் இணைகின்றன. இதன் மூலம் அவர்களது இலட்சியங்களை அவர்களது சமூகத்தில் ஆற்றலுடன் முன்னிறுத்த முடியும்.

AAIல் உங்கள் அமைப்பு சேருவதன் மூலம் :

  • சர்வதேச நாத்திகர் கூட்டமைப்பு அல்லது சுயசிந்தனையாளர் குழுக்கள் மூலம் நாத்திகர்கள் ஒன்றிணைந்து உலகை மாற்ற முடியும் என்பதை எடுத்துக்காட்ட முடியும்.
  • AAIஇன் இணையதளத்தின் மூலமும் அதன் கருத்துப்பரிமாற்றங்கள் மூலமும் உங்கள் அமைப்பை தெரியப்படுத்த முடியும்.
  • AAIஇன் கால்வருடாந்திர 'செகுலர் வேர்ல்ட்' என்ற பத்திரிக்கையை பெற முடியும். அத்துடன் அதில் உள்ள சிறந்த கட்டுரைகளை உங்களது பத்திரிக்கைகளில் இலவசமாக பிரசுரிக்க முடியும் . ('செகுலர் வேர்ல்ட்' பத்திரிக்கை ஆசிரியர் அனுமதியுடன்)
  • இமாஜின் என்ற செய்திமடலை பெற முடியும்.
  • AAIஇன் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, டென்மார்க், ஐயர்லாந்து, கம்பியா, கென்யா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் நடந்த வெற்றிகரமான மாநாடுகள் போன்ற மாநாட்டை உங்கள் நாட்டில் நடத்தும் வாய்ப்பையும், அதில் உலகத்தரம் வாய்ந்த நாத்திக பேச்சாளர்களை சொற்பொழிவாற்ற வைக்க முடியும்.
  • தலைமட்ட வளர்ச்சி திட்டங்களுக்காக AAI  அமைப்பு மூலமாக நிதி பெற விண்ணப்பிக்கும் வாய்ப்பு கிட்டும் 
  • மற்ற நாத்திக மற்றும் சுயசிந்தனையாளர் குழுக்களுடன் கருத்து மற்றும் அனுபவங்களை நேரடியாக AAI பரிமாற்றங்கள் மூலம் பகிர்ந்துக்கொள்ள முடியும்.
  •        AAIஇன்  கீழ்க்கண்ட செயல்களுக்கு ஆதரவளிக்க முடியும்:
    • அரசாங்கத்திலும் மற்றும் சமுதாயத்திலும் பகுத் தறிவு,திறனாய்வு சிந்தனை ,அடிப்படை காரணங்கள் மற்றும் சான்றுகள் அடிப்படையில் உருவான  சிந்தனைகள் போன்றவற்றை  பயன்படுத்த ஊக்குவித்தல் மற்று ம் உலகம் முழுவதும் நாத்தீகம், சுயசிந்தனை போன்றவற்றை வெளிப்படுத்தும்  மற்றும் நம்பிக்கை ஏற்படுத்தும் செயல்கள்.
    • நாத்திகர்களுக்கு எதிரான பாகுபாடு பற்றியும், வேற்று மதங்களை/மதச்சார்பின்மையை சகித்துக்கொள்வது பற்றியும், நாத்திகர்களின் உரிமை பற்றியும் நாடுகள், அரசாங்கங்கள் மற்றும் சமூகத்திற்கு எடுத்துக்கூறுவது.
    • புதிய சிந்தனை/நாத்தீக குழுக்களை அமைக்க உதவுவது (முக்கியமாக வளரும் நாடுகளில்)
    • நாத்திகர்கள் உலகளவில் AAI foundation மூலம் மாறுதலை ஏற்படுத்த வாய்ப்புகள் உருவாக்குவது 
    • உலகத்தை சுயசிந்தனைக்காக இன்னும் அறிவுமிக்க, பாதுகாப்பான, நிலையானதாக மாற்ற முயல்வது 

AAIஇன் சகோதர அமைப்புகளின்  தன்மை, உறுப்பினர் எண்ணிக்கை  மற்றும் அவை இயங்கும் இடத்தை பொறுத்து அங்கீகரிக்கப்பட்ட அல்லது இணை உறப்பினர் அமைப்புகளாக ஆக்கப்படலாம். இதை பற்றி மேலும் விவரம் அறிய அல்லது உறுப்பினர் விண்ணப்பப்படிவத்தை பெற membership[at]atheistalliance[dot]org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.